தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு பேரவை வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தஞ்சை, மார்ச் 17: தென்னிந்திய தொழிலாளர் நலன் சார்ந்த தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு பேரவை வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்களின் நலவாரியத்தை மீட்டெடுக்கவும், தொழிலாளர்களின் நலனை காக்கவும், தஞ்சை மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளில் கூட்டமைப்பு பேரவை சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதன்படி தஞ்சை சட்டமன்ற தொகுதியில் பேரவை பொதுச் செயலாளர் ஞான பன்னீர்செல்வம், திருவையாறு தொகுதியில் பேரவை தலைவர் தேசிங்குராஜன், பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் செயற்குழு உறுப்பினர் முகமது அனிபா, கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் தமிழ்நாடு உழைக்கும் கரங்கள் அனைத்து பிரிவு தொழிலாளர்கள் நலச்சங்க மாநில பொதுச் செயலாளர் வரதராஜன், ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதிக்கு தமிழக அமைப்புசாரா உடல் உழைப்பு தொழிலாளர் மாநில சங்க மாவட்ட தலைவர் யசோதா உத்திராபதி ஆகியோர் போட்டியிடுவதாக பொதுச் செயலாளர் ஞான பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

Related Stories:

More
>