×

திருவாடானை அருகே பிளஸ் 2 மாணவி கர்ப்பம்; சித்தப்பா தலைமறைவு

 

திருவாடானை, ஜூலை 30: திருவாடானை அருகே சிறுமியை கர்ப்பமாக்கி விட்டு தலைமறைவான சித்தப்பாவை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி பிளஸ் 2 படித்து வருகிறார். இவரது பெற்றோர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். சிறுமி தனது தாயுடன் பாட்டி வீட்டில் வசித்து வருகிறார். இவரது சித்தியின் கணவர் மகேந்திரன்(40). இவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும் நடந்த விஷயங்களை வெளியே ெசான்னால் கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளார். இதனிடையே சிறுமிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது.

அவரது பாட்டி சிறுமியை தேவகோட்டை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி 3 மாதம் கர்ப்பமாக உள்ளதாக தெரிவித்தனர். இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் ராமநாதபுரம் சைல்டு லைனுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சைல்டு லைன் அதிகாரிகள் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். இதில் நடந்த சம்பவங்களை சிறுமி கூறியுள்ளார். மேலும் இது குறித்து சிறுமி திருவாடானை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மகேந்திரனை தேடி வருகின்றனர்.

Tags : Thiruvadana ,Ramanathapuram district ,
× RELATED கே.வி.குப்பம் அருகே ரத்த கறை பையுடன்...