×

பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் அரவை நிறுத்தம்

பெரம்பலூர்,மார்ச் 17: பெரம்பலூர் எறையூரில் இயங்கி வரும் பொதுத்துறை சர்க்கரை ஆலையின் நடப்பு அரவைப் பருவம் டிசம்பர் இறுதியில் தொடங்கியது. இருந்தும் ஜனவரியில் கிடைசி லேட்டர்கள் மற்றும் இன்ஜெக்சன் பகுதிகளில் உடைப்பெடுத்து 500 மூட்டை உற்பத்தி செய்யத் தேவைப்படும் சர்க்கரைப்பாகு தரையில் கொட்டி வீணானது. இந்நிலையில் 2வது முறையாக கடந்த வாரம் இதே போல் 8 பாய்லர் டியூபுகள் வெடித்து சுமார் 80 மணி நேரம் ஆலையின் அரவைப்பணிகள் நிருத்தப்பட்டது. அதேபோல் தற்போது 3வது முறையாக பழுது ஏற்பட்டு நேற்று முன்தினமும் பாய்லரைச்சுற்றி அதனை குளிர்விக்கச் செய்யும் 2டியூப்கள் அதிக சூட்டின் காரணமாக வெடித்துள்ளது.

இதனால் ஆலையின்அரவைப் பணிகள்தொடங்க 48மணி நேரமாகும் என நிர்வாகம் அறிவித்துள்ளது. 3மாதத்திற்குள் தொடர்ந்து 3வதுமுறையாக அரவைப் பணி நிறுத்தப்பட்டுள்ளது. நேற்று அரவை நிறுத்தப்பட்டதால் ஆலைக்கு முன் 150 லோடுகளில் அரவைக்காகக் வைத்திருந்த 2ஆயிரம் டன் கரும்பு வெட்ட வெயிலில் காய்ந்து எடை குறைந்து விவசாயிகளுக்கு இழப்பை ஏற்படுத்தும் பரிதாப நிலையுள்ளது. இதுகுறித்து பெரம்பலூர் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ஞானமூர்த்தி வெ ளியிட்டுள்ள அறிக்கையி ல் தெரிவித்திருப்பதாவது : புதியதாக அமைக்கப்பட்ட பாய்லர் டியூப் எப்படி வெடித்தது. அடிக்கடி பாய்லர் டியூப் வெடிக்கும் நிலை எப்படி ஏற்படுகிறது. வெப்ப அளவீட்டுக் கருவி பொருத்தப்பட்டுள்ளதா இல்லையா. பொருத்தியிருந்தால் அதை கவனித்தார்களா இல்லையா.

தொழில் நுட்ப கோளாறு என்ன என்பதை உடனே ஆய்வுசெய்ய வே ண்டும். தொடர்ந்து இது போல் நடக்காமல் பார்த்து க்கொள்ள வேண்டும். வெ ட்டிய கரும்புகள் ஆலை முன் 150லோடுகள் காயும் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. அலையை இயக்க காலதாமதம் ஆகுமானால் வெட்டிய கரும்புகளை வெ ளி ஆலைக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.கரு ம்பு வெட்டுவதை நிறுத்தினாலும் வெளியூரில் இருந் து வந்துத் தங்கியுள்ள வெ ட்டு ஆட்கள் ஊர் திரும்பி னால் மீண்டும் வருவது சிர மம். தேர்தல் காலத்தைக் கணக்கில் கொண்டு கரு ம்பு வெட்டுவதை நிறுத்தா மல் முன்புபோடப்பட்ட ஒப் பந்தப்படி வேறு ஆலைக்கு கரும்புகளை அனுப்ப வே ண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

Tags : Perambalur ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி