×

கரூர் கோடங்கிப்பட்டி அருகே குகைவழிப்பாதையில் தேங்கிய தண்ணீரால் மக்கள் அவதி: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கரூர், மார்ச்17: கரூர் திருச்சி பைபாஸ் சாலையில் கோடங்கிப்பட்டி அருகே சாலையின் கீழ்ப்புறம் உள்ள குகை வழிப்பாதையை சீரமைத்து அனைவரும் எளிதில் பயன்படுத்தும் வகையில் சீரமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர். கரூர் திருச்சி பைபாஸ் சாலையில் வெள்ளியணை மற்றும் கோடங்கிப்பட்டி பகுதிகளுக்கு செல்லும் பைபாஸ் சாலையின் இடையே இரண்டு சக்கர வாகனங்கள் மட்டும் செல்லும் வகையில் குகை வழிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. குண்டுமாச்சான்பட்டி, வெங்ககல்பட்டி, ஏமூர் போன்ற பகுதியை சேர்ந்த மக்கள், இந்த குகைவழிப்பாதையின் வழியாக இரண்டு சக்கர வாகனங்களில் சின்னமநாயக்கன்பட்டி உட்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

பகல் நேரங்களில் மட்டுமே இந்த குகை வழிப்பாதையில் செல்லும் நிலை உள்ளது. இரவு நேரத்தில் யாரும் இதன் வழியாக செல்ல முடியாத நிலை நிலவி வருகிறது. மேலும், குகைவழிப்பாதையின் உட்புறம் தண்ணீர் தேங்கி மோசமான நிலையில் உள்ளது. எனவே, இதனை பார்வையிட்டு வாகன ஓட்டிகள் எளிதாக செல்லும் வகையில் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியை பார்வையிட்டு அதற்கான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Karur Kodangipatti ,
× RELATED கரூர் கோடங்கிப்பட்டி பிரிவு சாலையில்...