குளச்சல் சப் டிவிஷனில் நேற்று ஒரே நாளில் 100 போலீசாருக்கு கொரோனா தடுப்பூசி

கருங்கல், மார்ச் 17:  குளச்சல் சப் டிவிஷனில் 10 காவல் நிலையங்கள் உள்ளன. இங்கு அதிகாரிகள் உட்பட 276 போலீசார் பணிபுரிந்து வருகின்றனர். சுமார் 75 பேர் ஏற்கனவே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். தேர்தல் பணி காரணமாக ஏராளமான போலீசாரால் தடுப்பூசி போட முடியவில்லை. இதையடுத்து குளச்சல் ஏஎஸ்பி விஷ்வேஸ் சாஸ்திரி ஏற்பாட்டின் பேரில் நேற்று கருங்கலில் உள்ள ஒரு தனியார் கல்லூரி வளாகத்தில், சப் டிவிஷனுக்கு உட்பட்ட போலீசாருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. கிள்ளியூர் வட்டார சுகாதார அலுவலர் ஐயப்பன் மற்றும் பணியாளர்கள் நேற்று ஒரேநாளில் சுமார் 100 போலீசாருக்கு முதல்கட்ட தடுப்பூசி போட்டனர்.  இந்த பணியை ஏஎஸ்பி விஷ்வேஸ் சாஸ்திரி தொடங்கி வைத்தார்.

Related Stories:

>