×

காங்கிரஸ் கட்சியில் இணைந்த தமாகா மாவட்ட தலைவர்

சிவகாசி, மார்ச் 17: விருதுநகர் தெற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் கார்த்திக். இவர் த.மா.கா. துவங்கியது முதல்  கட்சியில் மாவட்ட தலைவர் பதவி வகித்து வருகிறார். தற்போது த.மா.கா. அதிமுக கூட்டணியில் உள்ளது. இத்தேர்தலில் விருதுநகர் மாவட்டத்தில் த.மா.கா கட்சிக்கு ஒரு இடம் கூட ஒதுக்கவில்லை. மேலும் தனி சின்னத்தில் போட்டியிடாமல் அதிமுகவின் சின்னத்தில் போட்டியிடுகிறது. த.மா.கா கட்சிக்கு அதிமுகவில் உரிய முக்கியத்துவம் கிடைக்காததால் விருதுநகர் தெற்கு மாவட்ட தலைவர் கார்த்தி அக்கட்சியில் இருந்து விலகி நேற்று சிவகாசி சட்டமன்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அசோகன் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவரை காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள்,  திமுக கூட்டணி கட்சியினர் வரவேற்றனர். சிவகாசி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு பாடுபட போவதாக கார்த்தி தெரிவித்தார்.

Tags : Tamaga ,Congress party ,
× RELATED தொகுதி பங்கீடு தொடர்பாக ஜி.கே.வாசனுடன் ஒன்றிய அமைச்சர் சந்திப்பு