தேசிய நெடுஞ்சாலையில் பலி வாங்க காத்திருக்கும் மின்கம்பம்

காளையார்கோவில், மார்ச் 17: காளையார்கோவிலில் இருந்து தொண்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பள்ளிதம்மம் விலக்கு அருகில் உடைந்து தொங்கும் மின் கம்பத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.காளையார்கோவிலில் இருந்து தொண்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பள்ளித்தம்மம் விலக்கு அருகில் உள்ள மின் கம்பத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலையில் மறுபக்கம் உள்ள மின் கம்பத்திற்கு மின் கம்பிகள் செல்கின்றன. தற்போது ஒருபுரம் மின்கம்பத்தின் மேல் பகுதி உடைந்து பல மாதங்களாக தொங்கி கொண்டு உள்ளது. தேசிய நெடுஞ்சாலை வழியாக தினமும் 1000க்கும் மேற்பட்ட வாகனங்கள் மற்றும் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் பள்ளி குழந்தைகள் எந்தநேரத்தில் உடைந்து விழுமோ என்ற அச்சத்தில் கடந்து செல்கின்றனர்.தேசிய நெடுஞ்சாலை என்பதால் எப்போது வேண்டுமானாலும் அசம்பாவிதம் ஏற்படலாம். சம்பந்தப்பட்ட மின்வாரியத் துறை அதிகாரிகள் உடனடியாக மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கூறினார்கள். சமூக ஆர்வலர் கூறுகையில், சில ஆண்டுகளுக்கு முன் இந்த மின் கம்பம் அமைக்கப்பட்டது. இந்த கம்பத்தில் இருந்து 10க்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன. அப்பகுதியில் மேலும் புதிதாக வீடுகள் கட்டப்பட்டு வருவதினால், புதிய மின் இணைப்புகள் கொடுப்பதற்கு மின்கம்பத்தை பயன் படுத்த முடியாத அளவிற்கு அபாயகரமான நிலையில் உள்ளது. அப்பகுதியில் மின்கம்பத்தினால் ஏற்படும் பெரிய அசம்பாவிதத்தை தவிர்க்க மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்கள்.

Related Stories:

>