×

காமராஜர் பல்கலை.க்கு சிறப்பு அந்தஸ்து

திருப்பரங்குன்றம், மார்ச் 17: நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உள்ள அடிப்படை வசதிகள், தொழில்நுட்ப வசதிகள், கற்றல், கற்பித்தல் ஆகியவற்றை  ஆய்வு செய்து தர மதிப்பீடு வழங்கப்படுகிறது. பல்கலைகழகங்களில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேசிய தர மதிப்பீட்டு அங்கீகாரக்குழு ஆய்வு செய்து தர மதிப்பீடு வழங்குவது வழக்கம். அந்த வகையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கடந்த மார்ச் 5 முதல் 7ம் தேதி வரை என மூன்று நாட்கள் தேசிய தர மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு செய்தனர் இதில் பல்கலைக்கழகத்தின் அனைத்து துறைகள், ஆய்வுக்கூடங்கள் மற்றும் அங்குள்ள நவீன பரிசோதனக் கருவிகள், அடிப்படை வசதிகள், மாணவர்,- ஆசிரியர் எண்ணிக்கை, விடுதிகளில் செய்து தரப்பட்டுள்ள வசதிகள், பல்கலைக்கழக வளாகம், கற்றல், கற்பித்தல் முறைகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் ஆய்வு முடிவுகளை நேற்று வெளியிட்டுள்ளனர். இதில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் தர வரிசை பட்டியலில் ஏ+ + எனும் சிற்ப்பு அந்தஸதை பெற்றுள்ளது. இதன்மூலம் பல்கலைக்கழகத்தில் பல்வேறு ஆராய்ச்சி உள்ளிட்ட  மேம்பாட்டு பணிகளுக்கு கூடுதல் நிதி கிடைக்கும் என தெரிகிறது.


Tags : Kamaraj University ,
× RELATED நிர்மலா தேவி வழக்கில் 6 ஆண்டுகளாக...