×

நத்தம் தொகுதியில் திமுக பிரசார கூட்டம் வேட்பாளர் ஆண்டிஅம்பலம் பங்கேற்பு

கோபால்பட்டி, மார்ச் 17: சாணார்பட்டி அருகே திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் சிலுவத்தூர், ராஜக்காபட்டி உள்ளிட்ட கிராமங்களில் சிறப்பு கூட்டங்கள் நடைபெற்றன. கூட்டத்திற்கு திமுக மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் விஜயன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக நத்தம் தொகுதி திமுக வேட்பாளர் ஆண்டிஅம்பலம் கலந்து கொண்டார். கூட்டத்தில் மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் விஜயன் பேசுகையில், ‘‘நத்தம் பகுதிக்கு வர வேண்டிய காவிரி கூட்டு குடிநீரை ஆளும் கட்சியினர் தங்கள் பகுதிக்கு அதிக அளவில் எடுத்து செல்கின்றனர். அவற்றை இன்றுவரை நத்தம் பகுதி மக்களுக்கு பெற்றுத்தர முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் நடவடிக்கை எடுக்கவில்லை. பல ஆண்டுகளாக நத்தத்தில் அரசு கல்லூரி அமைக்க திமுக சட்டசபையில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் தற்பொழுது தேர்தலுக்காக நத்தம் விஸ்வநாதன் அரசு கல்லூரி அமைப்போம் என வாக்குறுதி அளித்து வருகிறார். மின்சார துறையில் பல்லாயிரம் கோடி ஊழல் செய்த முன்னாள் அமைச்சரை எதிர்த்து போட்டியிடும் திமுக வேட்பாளர் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற தொண்டர்கள் பாடுபட வேண்டும்’’ என்றார். இதில் வடக்கு ஒன்றிய செயலாளர் மோகன் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,Anti Ambalam ,Natham constituency ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி