வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு லால்குடி தொகுதியில் 4 வது முறையாக திமுக வெற்றி பெறுவது உறுதி

லால்குடி, மார்ச் 16:  லால்குடி சட்டமன்ற தேர்தலுக்கான திமுக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. மத்திய மாவட்ட கழக பொறுப்பாளர் வக்கீல் வைரமணி, ஒன்றிய சேர்மன்கள் ரவிச்சந்திரன் (லால்குடி), ரசியா கோல்டன் ராஜேந்திரன் (புள்ளம்பாடி), ஒன்றிய செயலாளர்கள் தமிழ்ச்செல்வன், புள்ளம்பாடி வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வராசா, மதிமுக ஒன்றிய செயலாளர் சந்திரமோகன், மைக்கேல், கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் ரஜினி, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சபியுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் திமுக முதன்மை கழக செயலாளர் கே.என் நேரு தலைமை வகித்து லால்குடி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செளந்தரபாண்டியனை அறிமுக படுத்தி பேசுகையில், லால்குடி தொகுதி தொடர்ந்து வெற்றி பெற செய்து திமுக வின் கோட்டையாக மாற்றி வருகிறீர்கள்.

தற்போது 4 வது முறையாக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்து திமுக தலைவரை முதல்வராக அமர வைக்க தயாராகவிட்டீர் என்பதை தொண்டர்களின் முகத்தில் பார்க்கிறேன். திமுக வெற்றிப் பெற்று ஆட்சி செய்யும் காலத்தின்தான் நல்ல திட்டங்கள் நமது பகுதிக்கு நிறைவேற்றப்பட்டது. நமது கழக தொண்டர்களின் குடும்பங்களின் முன்னேற்றத்திற்கு பாடுபடுவேன் என உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன். சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளரை வெற்றி பெற செய்து திமுக தலைவர் ஸ்டாலினை முதல்வராக்க கழக நிர்வாகிகள் பாடுபட வேண்டும் என்றார்.

அதனை தொடர்ந்து லால்குடி திமுக அலுவலகம் அருகே அமைக்க பட்டிருந்த திமுக தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து முன்னாள் முதல்வர் கலைஞரின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கூட்டத்தில் லால்குடி ஒன்றிய, புள்ளம்பாடி திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் திரளானோர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் துரை மாணிக்கம் நன்றி கூறினார்.

Related Stories:

More