அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றிபெறுவது உறுதி மண்ணச்சநல்லூர் தொகுதி வேட்பாளர் கதிரவன் பிரசாரம்

மண்ணச்சநல்லூர், மார்ச் 16: மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிரவன் நேற்று மண்ணச்சநல்லூர் தொகுதியில் உள்ள புலிவலம் பெரமங்கலம் கரட்டாம்பட்டி சாத்தனூர் திருத்தலையூர், மம்பறை, திருத்தியமலை, மூவானூர், காட்டுக்குளம், பகுதிகளுக்கு சென்று நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார். அப்போது அவர் தெரிவித்ததாவது: திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை, நீட்தேர்வை ரத்து செய்ய முயற்சி எடுக்கப்படும், அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம், கர்ப்ப கால தொகையாக 24 ஆயிரம் மற்றும் திருமண உதவித்தொகை 12 மாதம் பேறு கால விடுப்பு அறிவித்துள்ளார். இந்த திட்டங்கள் தமிழகத்தில் பெண்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. எனவே தமிழக பெண்கள் திமுகவை ஆதரித்து வருகின்றனர்.

அதேபோல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உள்பட பல்வேறு திட்டங்களை அறிவித்து உள்ளார். இதனால் அனைத்து தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்கள் அமோக வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது என்றார். அப்போது காட்டுக்குளம் கணேசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Related Stories: