×

ரூ.பல லட்சம் பொருட்கள் கருகின நீடாமங்கலம் அருகே பொதக்குடி தமுமுக, மமக புதிய நிர்வாகிகள் தேர்வு

நீடாமங்கலம், மார்ச் 15: நீடாமங்கலம் அருகே பொதக்குடி தமுமுக, மமக கட்சியின் கிளை பொறுப்பாளர்கள் தேர்தலில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதையொட்டி தேர்தலுக்கு 4 வகையான வாக்குச் சீட்டுகளை பயன்படுத்தி உறுப்பினர்கள் வாக்களித்தனர். தேர்தல் அதிகாரிகளாக தமுமுக மாவட்ட செயலாளர் நவாஸ்கான், மாவட்ட பொருளாளர் சாகுல்அமீது கலந்துகொண்டனர். வாக்கு எண்ணிக்கையில் தமுமுக, மமக பொதக்குடி கிளை தலைவராக ஜப்பான் ஷாகுல் தேர்வு செய்யப்பட்டார்.

செயலாளராக நூர்முகமது, அப்துல்காதர், பொருளாளராக முகமதுஉஸ்மான் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் துணை நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டனர். புதிய பொறுப்பாளர்கள் கூறுகையில், மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் டிஆர்பி ராஜா அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற பாடுபடுவது என முடிவு எடுக்கப்பட்டது என்றனர்.

Tags : Pothakudi Tamumuka ,Mamaka ,Needamangalam ,
× RELATED கோடை நடவு பயிரில் எலிகளை கட்டுப்படுத்த பறவை தாங்கி