×

கும்பகோணத்தில் என்சிசி மாணவர்களுக்கு துப்பாக்கி கையாளும் பயிற்சி

கும்பகோணம், மார்ச் 16: கும்பகோணத்தில் என்சிசி மாணவ மாணவியருக்கான பி சான்றிதழுக்கான தேர்வு துப்பாக்கி கையாளும் பயிற்சி நடைபெற்றது.
கும்பகோணத்தில் தமிழ்நாடு போர் 8 பட்டாலியன் பிரிவு சார்பில் நடைபெற்ற என்.சி.சி மாணவியருக்கான ‘பி’ பிரிவு தேர்வில் துப்பாக்கி பயிற்சி தேர்வில் ஈடுபட்ட மாணவ மாணவிகள். என்.சி.சி., மாணவியருக்கான ‘பி’ சான்றிதழ் தேர்வில், நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தேசிய மாணவர் படை மாணவ மாணவியருக்கான ‘பி’ சான்றிதழ் தேர்வு நகர மேல்நிலைப்பள்ளி மற்றும் மைதானத்தில் நேற்றும் இன்றும் இரண்டு நாட்கள் நடைபெற்றது நடைபெறும் தேர்வில் தஞ்சை நாகை திருவாரூர் , உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பங்கேற்றனர்.

தமிழ்நாடு பட்டாலியன் சார்பில் தேசிய மாணவர் படையில் உள்ள கல்லூரி அளவிலான மாணவர்களுக்கான தேர்வை கமாண்டர் அதிகாரி கர்னல் ஹரிஷ் நாட்டார் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் சுனில் மற்றும் கேப்டன் செந்தில்நாதன் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் அணி நடைப்பயிற்சி, தேசிய மாணவர் படை அமைப்பு, வரைபடம்பயிற்சி, தூரங்களை கணக்கிடுதல் , தரைப்படை பயிற்சி, துப்பாக்கி குறித்த கையாளுதல் மற்றும் தற்காப்பு கலை உள்ளிட்டவைகள் தேர்வு மாணவ மாணவியருக்கு நடத்தப்பட்டன.

நூற்றுக்கு மேற்பட்ட என்.சி.சி., மாணவ மாணவியர் தேர்வில் பங்கேற்றனர். இந்த தேர்வின் போது இளம் மாணவ, மாணவியர்கள் துப்பாக்கிகளை கொண்டு கையாளுதல் பயிற்சி பெற்றது பார்வையாளர்களை வியக்க வைத்தது. மேலும் இதுகுறித்து என்சிசி அலுவலர் செந்தில்நாதன் கூறுகையில், இந்திய ராணுவத்திற்கும், இளம் மாணவ, மாணவிகள் குறிப்பாக பெண்கள் வருவது மிகவும் முக்கியம். மேலும் இந்த என்சிசி மூலம் தங்களை பாதுகாத்து கொள்வதுடன் இந்திய நாட்டை , ராணுவத்தினரும், கடற்படையினரையும் காப்பாற்றுவத்தில் பெருமை கொள்வதாக தெரிவித்தார்.

Tags : NCC ,Kumbakonam ,
× RELATED போதை விழிப்புணர்வு குறித்து என்சிசி மாணவர்கள் பேரணி