புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 9 பேர் வேட்புமனு தாக்கல்

புதுக்கோட்டை, மார்ச் 16: புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த மொத்தம் 9 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதன்படி விராலிமலை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் தண்டாயுதபாணியிடம் திமுக வேட்பாளர் பழனியப்பன் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த தொகுதியில் சமாஜ்வாதி கட்சி சார்பில் முருகேசன் வேட்புமனு தாக்கல் செய்தார். கந்தர்வக்கோட்டை தனி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கருணாகரனிடம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரமிலா வேட்புமனு தாக்கல் செய்தார். புதுக்கோட்டை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் டெய்சிகுமாரிடம் நமது மக்கள் கட்சியின் பொது செயலாளர் சரவணதேவா வேட்புமனு தாக்கல் செய்தார்.

இந்த தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சசிகுமார் வேட்புமனு தாக்கல் செய்தார். ஆலங்குடி தேர்தல் நடத்தும் அலுவலர் அக்பர் அலியிடம் அமமுக வேட்பாளர் விடங்கர் வேட்புமனு தாக்கல் செய்தார். அதன்படி மாவட்டத்தில் ஒரே நாளில் 9 பேர் வேட்புமனுவை தாக்கல் செய்தனர். திருமயம்: திருமயம் சட்டமன்ற  தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வைரமுத்து, தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி கிருஷ்ணனிடம் மனு தாக்கல் செய்தார். இதைதொடர்ந்து அமமுக வேட்பாளர் முனிராஜ், நாம் தமிழர் கட்சி சார்பில் சிவராமன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

Related Stories:

>