மணப்பாறைக்கு பொன்னமராவதியில் இருந்து அரசு பேருந்து இயக்க வேண்டும்

பொன்னமராவதி, மார்ச் 16: பொன்னமராவதியில் மணப்பாறைக்கு பேருந்துகள் இயக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் இருந்து மணப்பாறைக்கு பணி நிமித்தமாவும், பள்ளி, கல்லூரிக்கு மாணவ மாணவிகளும் மற்றும் சொந்த வேலையாக ஏராளமானோர் சென்று வருகின்றனர். பொன்னமராவதியில்  இருந்து தனியார் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இதனால் அனைத்து தரப்பினரும் தனியார் பேருந்ைத மட்டுமே நம்பி இருக்கும் நிலை உள்ளது.  அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் போதிய பேருந்து வசதி இல்லாததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

தனியார் பேருந்தும் அதிக பயணிகளுடன் வருவதால் அதில் அனைவரும் பயணிக்க முடியவில்லை. பொன்னமராவதியில் இருந்து உலகம்பட்டி, துவரங்குறிச்சி வழியாக ஒரு பேருந்தும், பொன்னமராவதியில் இருந்து தூத்தூர், ஆலவயல், நகரப்பட்டி, பாலகுறிச்சி வழியாக ஒரு பேருந்தும் மணப்பாறைக்கு இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மணப்பாறைக்கு மருத்துவமனை, பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் பிடிக்க என பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வர ஏதுவாக பொன்னமராவதியில் இருந்து மணப்பாறைக்கு அரசு பேருந்துகள் இயக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: