திருமயத்தில் அமமுக வேட்பாளரை வரவேற்க வைத்திருந்த பட்டாசு பறிமுதல்

திருமயம், மார்ச் 16: திருமயத்தில் அமமுக வேட்பாளரை வரவேற்க வைத்திருந்த பட்டாசுகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதியில் நேற்று அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மனுதாக்கல் செய்ய தொண்டர்களுடன் வந்திருந்தார். அப்போது மேளதாளத்துடன் பட்டாசுகள் வெடித்து வேட்பாளருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனிடையே தேர்தல் பறக்கும் படையினர், அமமுக தொண்டர்களிடம் நடத்திய சோதனையில் அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.

Related Stories:

>