×

அரியலூர் தொகுதியில் அரசியல் கட்சியினர் வேட்பு மனுத்தாக்கல்

அரியலூர், மார்ச் 16: அரியலூர் சட்டமன்ற தொகுதிக்கான வேட்பு மனுவை அரசியல் கட்சியினர் தாக்கல் செய்தனர். அரியலூர் மாவட்டத்தில் அதிமுக மாவட்ட செயலாளர் தாமரை எஸ்.ராஜேந்திரன் தனது வேட்பு மனுவை ஆர்டிஓ அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஏழுமலையிடம் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சுகுணாகுமார் தனது வேட்பு மனுவை ஆர்டிஓ அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வழங்கினார்.

பின்னர் அமமுக மாவட்ட செயலாளர் துரை. மணிவேல் அரியலூர் ஆர்டிஓ அலுவலகத்தில் வேட்பு மனுவை கூட்டணி கட்சி தேமுதிக மாவட்ட செயலாளர் ராம.ஜெயவேல் முன்னிலையில் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து சுயேட்சை வேட்பாளர் தங்க.சண்முகசுந்தரம் மண்பானையில் சில்லரை காசுகள் மற்றும் பணத்தை கொண்டு வந்து தனது வேட்பு மனுவை ஆர்டிஓ அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஏழுமலையிடம் வழங்கினார்.

Tags : Ariyalur constituency ,
× RELATED பெரம்பலூர் மதன கோபால சுவாமி கோயில் பங்குனி உத்திர பெருவிழா