×

சத்தியவான் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பு சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க ஆறுபாதி கிராம மக்கள் முடிவு

மயிலாடுதுறை, மார்ச் 16: சத்தியவான் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்காததால் வருகிற சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க ஆறுபாதி கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர். மயிலாடுதுறை அருகே 7 கி.மீ தூரத்தில் உள்ளது ஆறுபாதி கிராமம். இந்த கிராமத்தின் வழியாக தான் சத்தியவான் வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்கால்மூலம் 5 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெற்று வந்தது. கடந்த 10 ஆண்டுக்கு முன் மயிலாடுதுறை பாதாள சாக்கடை கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் சத்தியவான் வாய்க்காலில் விடப்பட்டது, இதுகுறித்து பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான அதிமுகவை சேர்ந்த பவுன்ராஜிடம் பலமுறை எடுத்து கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த சத்தியவான் வாய்க்காலில் கலக்கும் கழிவுநீரால் 24 மணி நேரமும் துர்நாற்றம், சருமநோய் போன்றவை ஏற்படுவதுடன் நிலத்தடி நீரும் கெட்டு விட்டது. 2016ம் ஆண்டு வாக்கு கேட்க வரும்போது நாங்கள் இந்த கோரிக்கையை வைத்தபோது இதே பவுன்ராஜ், நான் இதற்கு ஒரு முடிவெடுக்கிறேன் என்றார். ஆனால் மேலும் 5 ஆண்டுகள் கடந்து விட்டது. இதனால் ஆறுபாதி கிராம மக்கள் விரக்தியில் உள்ளனர், இந்நிலையில் நேற்று முன்தினம் ஊர் கூட்டம் போட்டு இந்த முறை ஆறுபாதி கிராம மக்கள் தேர்தலில் வாக்களிக்காமல் புறக்கணிக்க போவதாக தெரிவித்துள்ளனர். விரைவில் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டம் நடத்தப்படும் என்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : Satyavan canal ,
× RELATED விருதுநகரில் சதம் அடித்து விளையாடும்...