பவுசுபேட்டை கிராமத்தில் மின்கசிவால் பெட்டிக்கடையில் தீவிபத்து

கொள்ளிடம், மார்ச் 16: கொள்ளிடம் அருகே பவுசுபேட்டை கிராமத்தில் மின்கசிவால் பெட்டிக்கடை எரிந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சாம்பலானது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மகேந்திரப்பள்ளி ஊராட்சி பாவுசுபேட்டை கிராமத்தை சேர்ந்தவர் தினகரன் (45). இவரின் வீட்டுக்கு பக்கத்தில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று கடைக்குள் இருந்த மின் வயரில் இருந்து கசிந்த மின்சாரத்தால் தீ விபத்து ஏற்பட்டு கடையில் வைக்கப்பட்டிருந்த அனைத்து வியாபார பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் எரிந்தது. இந்த தகவல் கிடைத்ததும் சீர்காழி தீயணைப்பு அலுவலர் ரமேஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். தீவிபத்தில்ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து புதுப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: