சின்னதாராபுரம் அருகே மொபட்டில் வந்தவர் லாரி மோதி படுகாயம்

க.பரமத்தி, மார்ச் 16: சின்னதாராபுரம் அடுத்த புதுப்பாளையம் அருகே மொபட் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவருக்கு படுகாயம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். க.பரமத்தி அடுத்த சின்னதாராபுரம் அருகேயுள்ள புதுப்பாளையத்தை சேர்ந்தவர் ராமநாயக்கர் மகன் கிருஷ்ணன் (45). இவர் வீட்டில் இருந்து சொந்த வேலையாக சென்றவர் வீடு திரும்புவதற்காக தென்னிலை சின்னதாராபுரம் சாலையில் மொபட்டில் வந்து கொண்டிருந்தார்.

 

ஊர் அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த லாரி மோதியது. இதில் படுகாயமடைந்த கிருஷ்ணனை அருகிலிருந்தவர்கள் மீட்டு கரூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர் கொடுத்த புகாரின்பேரில் சின்னதாராபுரம் போலீசார் லாரி டிரைவர் ஷாஜகான் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

More