×

பெர்ன் புல் மைதானத்திற்குள் சுற்றுலா பயணிகள் செல்ல தடை

ஊட்டி,மார்ச்16: ஊட்டி தாவரவியல் பூங்காவில் பராமரிப்பு பணி காரணமாகவும், தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளதாலும் பெர்ன் புல் மைதானமும் மூடப்பட்டுள்ளது. கோடை சீசன் நெருங்கிய நிலையில், மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பூங்காக்களையும் தயார் செய்யும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. குறிப்பாக, தாவரவியல் பூங்கா மலர் கண்காட்சிக்காக தற்போது தயார் செய்யப்பட்டு வருகிறது.  பூங்கா முழுவதிலும் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. மேலும், 35 ஆயிரம் தொட்டிகளில் பல்வேறு வகையான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. இந்த தொட்டிகள் அனைத்தும் மாடங்ள் மற்றும் பெர்ன் புல் மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டிகளை நாள் தோறும் பராமரிக்கும் பணிகள் மற்றும் ெதாட்டிகளில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், சுற்றுலா பயணிகள் சென்றால் இடையூறு ஏற்படும் என்பதால், பெர்ன் மைதானமும் மூடப்பட்டுள்ளது. ஏற்கனவே, பராமரிப்பு பணிக்காக பெரிய புல் மைதானமும் மூடப்பட்ட நிலையில், சுற்றுலா பயணிகள் பூங்காவில் உள்ள சிறிய புல் மைதானத்திற்குள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Bern Bull Stadium ,
× RELATED பெர்ன் புல் மைதானத்திற்குள் சுற்றுலா பயணிகள் செல்ல தடை