×

திருக்கோவிலூர் அருகே தேமுதிகவினர் எழுதிய சுவர் விளம்பரத்தை அழித்த விசிக: போலீசாரிடம் வாக்குவாதம்-பரபரப்பு

 

திருக்கோவிலூர், ஜூலை 27: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த கீழத்தாழனூர் கிராமத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி தேமுதிகவினர் நேற்று முன்தினம் சுவர் விளம்பரம் செய்திருந்தனர். இந்நிலையில் விசிகவை சேர்ந்த சிலர் விசிக மாநாடு வருவதால் நாங்கள் விளம்பரம் எழுதப் போகிறோம் என்று கூறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த சிலர் தேமுதிகவினர் எழுதிய சுவர் விளம்பரத்தை அழித்ததாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த தேமுதிக கட்சி நிர்வாகிகள் கீழத்தாழனூர் பகுதிக்கு வந்து விசிகவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் சாலை மறியல் செய்ய முயன்றனர். இதனை அறிந்த திருக்கோவிலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தனர். இதனால் சாலை மறியல் செய்யும் முயற்சியை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags : DMDK ,Thirukovilur ,Vijayakanth ,Keezhathazanur ,Kallakurichi district ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...