கிணத்துக்கடவு திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் கூட்டணி கட்சி நிர்வாகிகளிடம் ஆதரவு திரட்டினார்

கோவை, மார்ச் 16:  கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் குறிச்சி பிரபாகரன் போட்டியிடுகிறார். அவர் நேற்று கிணத்துக்கடவு நகரம் மற்றும் மேற்கு ஒன்றிய பகுதிகளில் உள்ள திமுக மற்றும் கூட்டணி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார். கிணத்துக்கடவு பிளாக் மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன், கிணத்துக்கடவு பகுதியில் உள்ள 10 நம்பர் முத்தூர் சங்கராயபுரம், சிங்கையன்புதூர், வட புதூர், சிக்கலாம் பாளையம், கோடங்கி பாளையம், இம்மிடி பாளையம் ஆகிய பகுதிகளுக்கு சென்று அங்குள்ள திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து சால்வை அணிவித்து ஆதரவு திரட்டினார்.இந்த நிகழ்வின்போது, கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் முகமது யாசின், நகர பொறுப்பாளர் கனகராஜ், கோவை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி, பொதுக்குழு உறுப்பினர் நடராஜ், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராஜன், கிணத்துக்கடவு ஒன்றிய குழு உறுப்பினர் ராமசாமி, கணேசன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Related Stories: