போராட்டத்தால் பணிகள் முடங்கியது பொதுமக்கள் கடும் அவதி திருவண்ணாமலை மாவட்டத்தில்

(தி.மலை) வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த

திருவண்ணாமலை, மார்ச் 16: திருவண்ணாமலை மாவட்டத்தில், வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக வங்கி பணிகள் முடங்கியது. கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும், வங்கிகளை தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து, வங்கி ஊழியர் சங்கங்களின் சார்பில் நாடு தழுவிய இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், பொதுத்துறை வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

அதனால், வங்கிகள் அனைத்தும் ஊழியர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும், வங்கிகளில் பண பறிவர்த்தனைகள் முடங்கியதால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். சனி, ஞாயிறு விடுமுறை நாட்களுக்கு பிறகு, நேற்று வேலை நிறுத்தம் நடந்தததால் தொடர்ந்து வங்கிகள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த போராட்டம் இன்றும் நடக்கிறது. வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பவில்லை. எனவே, ஏடிஎம் இயந்திரங்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதால், பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். குறைந்த எண்ணிக்கையில் செயல்பட்ட ஏடிஎம் மையங்களில் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில், திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகேயுள்ள இந்தியன் வங்கி மண்டல அலுவலகம் முன்பு, வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது, பொதுத்துறை வங்கிகளை படிப்படியாக தனியார் மயமாக்கும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

Related Stories:

>