வைகுண்டம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சண்முகநாதன் வேட்பு மனு தாக்கல்

வைகுண்டம், மார்ச் 16: வைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் எஸ்.பி.சண்முகநாதன் தாலுகா அலுவலகத்தில் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜீவரேகாவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

உதவி தேaர்தல் நடத்தும் அலுவலரும் வைகுண்டம் தாசில்தாருமான கோபாலகிருஷ்ணன், சமூக நல பாதுகாப்பு திட்ட தாசில்தார் ரமேஷ், சாத்தான்குளம் தாசில்தார் செல்வகுமார், தேர்தல் துணை தாசில்தார் சிவக்குமார், அதிமுக மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், பாஜக மாநில வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் முத்துராமலிங்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் எஸ்பி சண்முகநாதன் எம்எல்ஏ கூறுகையில், தொகுதியை சார்ந்தவன் என்பதால் சிறுவயதிலிருந்தே விவசாயிகளின் கஷ்டங்கள் அனைத்தும் தெரியும். அதனால் விவசாயிகளுக்கு தேவையான தண்ணீர் மற்றும் உரங்கள் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுத்துள்ளேன். தொகுதி மக்களுக்கு தேவையான அனைத்து கோரிக்கைகளும் உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறேன். அதிமுக தேர்தல் அறிக்கையை பொருத்தவரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொல்லாமலே மக்கள் நலத்திட்ட பணிகளை அதிகம் செய்து வருகிறவர். தற்போது தேர்தல் அறிக்கையின் மூலம் பல்வேறு மக்களுக்கு தேவையான அனைத்தையும் செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளார். சாத்தான்குளம் பகுதியில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழிற்சாலை பணி நடைபெற்று வருகிறது. அதிமுக தேர்தல் அறிக்கையிலும் வீட்டுக்கு ஒருவர் அரசு வேலை என்ற உறுதி அளிக்கப்பட்டுள்ளது. நிச்சயம் நான் வெற்றி பெறுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

அதிமுக ஒன்றிய செயலாளர்கள் காசிராஜன், அழகேசன், அதிமுக திருச்செந்தூர் வேட்பாளர் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன், தெற்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் அய்யாத்துரை பாண்டியன், கொங்கராயகுறிச்சி அதிமுக கிளைச்செயலாளர் வெங்கடாசலம், கொங்கராயகுறிச்சி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஜாகீர் உசேன், வைகுண்டம் நகர செயலாளர் காசிராஜன், பாஜ மாவட்ட தலைவர் பால்ராஜ், மாவட்ட செயலாளர் சங்கர், மாவட்ட பொதுச்செயலாளர் செல்வராஜ், மற்றும் த.மா.கா கட்சியினர் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் எஸ்.பி.சண்முகநாதனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories:

>