முதல்வர் இன்று புதுக்கோட்டை செல்கிறார்

சேலம், மார்ச் 16: எடப்பாடி தொகுதியில் தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்ட முதல்வர், இன்று காலை புதுக்கோட்டை புறப்பட்டு செல்கிறார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நேற்று முன்தினம் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். அங்கிருந்து கார் மூலம் நள்ளிரவு சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டிற்கு வந்தார். நேற்று காலை இடைப்பாடி தொகுதிக்கு சென்ற அவர், வேட்புமனுவை தாக்கல் செய்ததுடன் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தை முடித்துக்கொண்டு இரவு 9 மணிக்கு சேலம் வந்தார். இன்று (16ம் தேதி) காலை 6.30 மணிக்கு கார் மூலம் புதுக்கோட்டை புறப்பட்டு செல்கிறார். தஞ்சாவூர், திருச்சி ஆகிய இடங்களில் தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்கிறார்.

Related Stories:

>