ராசிபுரத்தில் அதிமுக, பாமகவினர் திமுகவில் இணைந்தனர் ராஜேஸ்குமார் வரவேற்றார்

ராசிபுரம், மார்ச் 16: நாமகிரிபேட்டை ஒன்றியம், மங்களபுரம் ஊராட்சி அதிமுக ஒன்றிய இலக்கிய அணி செயலாளரும், முன்னாள் தொடக்க கூட்டுறவு வங்கி தலைவருமான கேஆர்.சுந்தரம், முன்னாள் தொடக்க கூட்டுறவு வங்கி தலைவரும், பாமக முன்னாள் ஒன்றிய அவைத்தலைவருமான கருமலை, முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஜானகிராமன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் சுப்ரமணி, கேசவன், பசுபதி, சத்தியகாந்தி, சிவா, விக்னேஷ், குகன், சிவா, மாணிக்கம் மற்றும் அருள் ஆகியோர், அக்கட்சியில் இருந்து விலகி, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஸ்குமார், ஒன்றிய செயலாளர் ராமசுவாமி ஆகியோர் முன்னிலையில், திமுகவில் இணைந்தனர்.

இந்நிகழ்ச்சியில், ராசிபுரம் தொகுதி திமுக மதிவேந்தன், புதுப்பட்டி பேரூர் செயலாளர் ஜெயக்குமார், வாமலை முன்னாள் ஒன்றிய செயலாளர் கருப்பண்ணன், ஒன்றிய அவைத்தலைவர் மணி, திருப்பதி, மாவட்ட விவசாய அணி நடேசன், ஒன்றிய பொருளாளர் டாக்டர் பாண்டியன், செயலாளர் மங்களபுரம் காசி, நல்லதம்பி, ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ரமேஷ்குமார், ரங்கசாமி, முருகப்பன், முருகேசன், சண்முகம், முன்னாள் கவுன்சிலர் உரம்பு சேகர், சந்தானம், சரவணன், அறிவழகன், ஒன்றிய இளைஞர் அணி அருள், கோபி குட்டியப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>