ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் தேர்வு

சேந்தமங்கலம், மார்ச் 16: கொல்லிமலை வட்டார ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அமைப்பு தேர்தல் நடந்தது. இதில் ஆணையாளர்களாக மோகனூர் வட்டார செயலாளர் அத்தப்பன், பரமத்தி வட்டார செயலாளர் முருகேசன் ஆகியோர் செயல்பட்டனர். இதில் தலைவராக தமிழழகன் துணை தலைவர்கள் ரகுபதி, சரவணன், செயலாளர் மணிகண்டன், துணை செயலாளர்கள் ராஜேஷ், சிலம்பரசன், பொருளாளர் சங்கீதா, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ராஜா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்று கொண்டனர். அவர்களுக்கு சங்க உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories:

>