சிதிலமடைந்த அணை பூங்கா

அரூர், மார்ச் 16:  அரூர் கீரைப்பட்டி அருகே வள்ளிமதுரை கிராமத்தில் வரட்டாறு அணைக்கட்டு உள்ளது. இந்த அணையையொட்டி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அரூர் பகுதி மக்களுக்கு பொழுதுபோக்கிற்கு என குறிப்பிடத்தகுந்த இடமில்லாத நிலையில் வள்ளிமதுரை அணைக்கட்டிற்கு அதிகளவில் வந்து செல்கின்றனர். ஆனால், பூங்கா பராமரிக்கப்படாமல் பூட்டியே உள்ளதால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை காணப்படுகிறது. மேலும், கேட் பூட்டப்பட்டிருந்தாலும் அத்துமீறி நுழையும் குடிமகன்கள் மது அருந்திவிட்டு ஆங்காங்கே பாட்டில்களை வீசி செல்வது வாடிக்கையாக உள்ளது. எனவே, இப்பகுதி மக்களுக்கு உள்ள ஒரே சுற்றுலா தலமான வள்ளிமதுரை அணைக்கட்டு பூங்காவை சீரமைத்து பாதுகாப்பிற்கு ஆட்களை அமர்த்தி பராமரித்து வந்தால் பயனுள்ளதாக இருக்கும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>