பட்டாசு வெடித்தால் வழக்கு தேர்தல் அலுவலர் உத்தரவு

சிவகாசி, மார்ச் 16: சிவகாசி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் தினேஷ்குமார் நேற்று கூறுகையில், ‘‘மனு தாக்கல் செய்ய வரும் அரசியல் கட்சியினர் முறையாக தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி வரவேண்டும். சரவெடி வெடிக்க தடை விதிக்கபட்டுள்ளது. எனவே தேர்தல் வீடியோ பதிவு அதிகாரிகள் பட்டாசு வெடிப்பவர்களை வீடியோ எடுக்க வேண்டும். அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்ய வேண்டும். அதே போல் எந்த அரசியல் கட்சியினரும் கூட்டமாக தேர்தல் நடத்தம் அலுவலர் அறைக்குள் வர கூடாது. ஒரு வேட்பாளர் உடன் இருவர் மட்டுமே வர வேண்டும்’’ என போலீஸ் மற்றும் அலுவலர்களுக்கு உத்தரவு  பிறப்பித்தார். இதனிடையே அதிமுக வேட்பாளர் மனு தாக்கல் செய்து விட்டு ஊர்வலமாக தேர்தல் அலுவலகத்தில் இருந்து சென்றனர். அப்போது சரவெடி பட்டாசு கொழுத்தினர். இதை தொடர்ந்து அதிமுகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Related Stories:

>