×

ஏற்காட்டில் வாகன தணிக்கை ஆவணங்களின்றி இயக்கிய 7 வாகனங்கள் பறிமுதல்

 

ஏற்காடு, ஜூலை 24: ஏற்காட்டில் சமீபகாலமாக போக்குவரத்து விதிமீறல்கள் அதிகரித்து வருவதாக எழுந்த புகார்களை தொடர்ந்து, சேலம் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் தலைமையில் அதிகாரிகள், நேற்று மாலை வாகன தணிக்கை மற்றும் ஆய்வுகளில் ஈடுபட்டனர். ஏற்காட்டின் முக்கியப் பகுதிகள் மற்றும் பிரதான சாலைகளில் நடைபெற்ற இந்த ஆய்வின் போது, ஓட்டுநர் உரிமம், காப்பீடு, தகுதிச் சான்று மற்றும் புகைச்சான்று உள்ளிட்ட முறையான ஆவணங்களின்றி இயக்கப்பட்ட 2 ஆட்டோக்கள், 2 பயணிகள் வேன்கள், 2 சரக்கு வாகனங்கள் மற்றும் ஒரு பொக்லைன் என 7 வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையிலான குழுவினர் பறிமுதல் செய்து, ஏற்காடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Tags : Yercaud ,Salem East ,Regional Transport Officer ,Thiagarajan ,
× RELATED சேலத்தில் விஜயேந்திரர் பக்தர்களுக்கு அருளாசி