×

ராஜபாளையம் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மனுதாக்கல்

ராஜபாளையம், மார்ச் 16: ராஜபாளையம் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.  ராஜபாளையம் தொகுதியில் அதிமுக சார்பாக    பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி போட்டியிடுகிறார். ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி கல்யாணகுமாரிடம் நேற்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர் ராஜபாளையம் ஒன்றியம் தளவாய்புரத்தில் மூன்றாவது நாளாக நேற்று தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். இதை தொடர்ந்து செட்டியார்பட்டி, அருள்புத்தூர், மீனாட்சிபுரம்,  கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்தார். பிரசாரத்தில் அமைச்சர் பேசுகையில், ‘‘ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் கடந்த 10 ஆண்டுகளில் ஏராளமான திட்டங்களை கொண்டு வந்துள்ளேன். சத்திரபட்டி ரயில்வே மேம்பாலம், தாமிரபரணி கூட்டுக்குடிநீர், பாதாள சாக்கடை திட்டம், புதிய சாலைகள்,  ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு ஹைடெக் வசதிகளுடன் கூடிய நவீன 108 ஆம்புலன்ஸ் சேவை, தரம் உயர்த்தப்பட்ட அரசு மருத்துவமனை என பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளேன்’’ என்று தெரிவித்தார். தேர்தல் பிரசாரத்தில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Rajapalayam ,constituency ,AIADMK ,Minister ,Rajendrapalaji ,
× RELATED ராஜபாளையத்தில் திமுக வேட்பாளர் தீவிர...