100 சதவீத வாக்களிப்ைப வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

ராஜபாளையம், மார்ச் 16: ராஜபாளையம் அருகே பள்ளி மாணவ, மாணவிகள் 100 சதவீதம் வாக்களிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.  ராஜபாளையம் அருகே முகவூர் தெற்குதெரு இந்து நாடார் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் சட்டமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்களிப்பை உறுதி செய்யும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். இதில் என் வாக்கு என் உரிமை, 100 சதவீத வாக்கை உறுதி செய்வோம் என்ற பதாகையை ஏந்தி சென்றனர். நகரின் முக்கிய பகுதிகள் வழியாக பேரணி சென்றது. இதில் பள்ளி ஆசிரியர்கள், ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்

Related Stories:

>