×

கொள்ளிடம் அருகே பள்ளாங்குழி சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

 

கொள்ளிடம், ஜூலை 23: கொள்ளிடம் அருகே பள்ளாங்குழி சாலையால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். உடனே சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூரிலிருந்து, கூத்தியம்பேட்டை, கொப்பியம், மாதானம், வழியாக புதுப்பட்டினம் செல்லும் சாலையில் பன்னீர்கோட்டகம் என்ற இடத்தில் சாலை நடுவே பள்ளாங்குழி போல் பள்ளம் ஏற்பட்டுள்ளது. கடந்த 10 தினங்களாக இருந்து வரும் இந்த பள்ளத்தினால் சாலையில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார் போன்ற வாகனங்களும் தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்லும் இளைஞர்கள் வேகமாக செல்லும்போது சாலை நடுவே உள்ள பள்ளத்தில் திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளாக வருகின்றனர்.

Tags : Pallanguzhi road ,Kollidam ,Puttur ,Mayiladuthurai district ,Koothiyampettai ,Koppiyam ,Madhanam ,Pudupattinam… ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...