×

போதைப்பொருள் கடத்தலை தடுக்க கேரள எல்லைப் பகுதியில் இருமாநில போலீசார் சோதனை

கூடலூர், மார்ச் 16: தேர்தலை முன்னிட்டு மது மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் வகையில், குமுளியில் தமிழக-கேரள போலீசார் இணைந்து சோதனை நடத்தினர். கேரள கலால் ஆணையர் தலைமையில், திருவனந்தபுரத்தில் நடைபெற்ற தமிழக-கேரள அமலாக்க பிரிவு அதிகாரிகள் கூட்டத்தில் கடந்த பிப்.24ல் இருமாநில எல்லைப்பகுதி வழியாக சட்டத்துக்கு புறம்பாக நடைபெறும் செயல்களை தடுப்பது தொடர்பாக, கம்பம் நகராட்சி கூட்ட அரங்கில் தமிழக-கேரள போலீஸ் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், தேர்தலை முன்னிட்டு எல்லைப்பகுதிகள் வழியாக கஞ்சா, மது மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் விதமாக குமுளி, ரோசாப்புகண்டம், இரண்டாம் மைல், பாண்டிகுழி ஆகிய கேரள-தமிழ்நாடு எல்லைப் பகுதிகளில் சட்டத்துக்கு புறம்பான செயல்களை தடுக்க, இருமாநில போலீஸ் அதிகாரிகளின் வாகன சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதன்படி இடுக்கி துணை கலால் ஆணையர் பிரதீப் மற்றும் தேனி ஏ.டி.எஸ்.பி சங்கரன் உத்தரவின்பேரில், இடுக்கி உதவி கலால் ஆணையர் டோமி ஜேக்கப் மற்றும் திண்டுக்கல் டி.எஸ்.பி. முத்துசாமி தலைமையில் நேற்று குமுளியில் வாகன சோதனை நடைபெற்றது. தமிழகம் சார்பில் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர்கள் செல்லம், முருகேஸ்வரி, எஸ்ஐ முகுந்தன், கேரளா சார்பில் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர்கள் ராய், ஜேம்ஸ் மற்றும் போலீசார் ராஜ்குமார் உட்பட முப்பது அதிகாரிகள் பங்கேற்றனர். சட்டசபை தேர்தலுக்கு முன் கஞ்சா, மது மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த சோதனை நடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags : Kerala ,
× RELATED தமிழக – கேரள எல்லையோர கிராமங்களில்...