×

ஆண்டிபட்டியில் டெங்கு தடுப்பு நடவடிக்கையாக கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்

ஆண்டிபட்டி, மார்ச் 16: தினகரன் செய்தி எதிரொலியாக, ஆண்டிபட்டியில்,டெங்கு தடுப்பு நடவடிக்கையாக கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பேருராட்சியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நகரில் பேருராட்சி நிர்வாகம் சார்பில் கழிவுநீர் வாறுகாலை முறையாக தூர்வாராததாலும், கொசு மருந்து, கிருமி நாசினி, பிளிச்சிங் பவுடர் தெளிக்காததாலும் வாறுகால்களில் கொசுக்கள் உருவாகி, டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் பரவுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். மேலும், பாப்பம்மாள்புரம் பகுதியில் 2 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், பேருராட்சி நிர்வாகம் சுகாதார பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என  கோரிக்கை விடுத்து வந்தனர். இது குறித்த செய்தி நேற்று நமது தினகரன் நாளிதழில் வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக பேருராட்சி சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் தலைமையில, பணியாளர்கள் நகரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வாறுகால்களில் கழிவுநீரை அகற்றியும், கொசுமருந்தும் தெளித்தும் சுகாதார நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ