×

செங்கல்பட்டு மாவட்ட உள்ளாட்சி தேர்தல்: திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுகம்

கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்டத்தில் வரும் அக்டோபர் 6 மற்றும் 9-ம் தேதிகளில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஒன்றிய ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் ஆகியவற்றுக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களின் அறிமுக கூட்டம் நேற்று மாலை ஊரப்பாக்கத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு ஊரகத் தொழில்துறை அமைச்சரும் காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளருமான தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஆர்.சுந்தரமூர்த்தி, காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.ஆராமுதன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்கேடி.கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்.அவர் பேசுகையில், வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள், கடந்த 4 மாத கால திமுக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி, மக்களிடம் வாக்கு சேகரிக்க வேண்டும். செங்கல்பட்டு மாவட்டத்தில் அனைத்து உள்ளாட்சி பதவிகளில் 100 சதவீத திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற செய்து, தமிழக முதல்வரிடம் வாழ்த்து பெறவேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இதில் திமுக, கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்….

The post செங்கல்பட்டு மாவட்ட உள்ளாட்சி தேர்தல்: திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுகம் appeared first on Dinakaran.

Tags : Chengalpattu District Local Election ,Dishagam Alliance Party ,Koodovancheri ,Chengalpattu District ,Dizhagam Alliance Party ,Dinakaran ,
× RELATED அதிமுக வேட்பாளர் அறிமுகம் கூட்டம்