திருமங்கலத்தில் டூவீலர் மீது லாரி மோதி இரண்டு பெண்கள் பலி திருமணத்திற்கு சென்று திரும்பிய போது பரிதாபம்

திருமங்கலம், மார்ச் 16: திருமங்கலத்தில் திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு டூவீலரில் திரும்பிய இரண்டு பெண்கள் மீது லாரி மோதியதில் அவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர் இதில் அதிஷ்டவசமாக 2 வயது குழந்தை உயிர் தப்பியது.

மதுரை திருமங்கலம் முகமதுஷாபுரத்தை சேர்ந்தவர் வரதன். இவரது மனைவி முத்துலட்சுமி(32). உறவினர் திருநகரை சேர்ந்த சுமன் மனைவி சுமிதா(34). நேற்று செக்கானூரணியில் நடந்த உறவினர் வீட்டு திருமணத்திற்கு முத்துலட்சுமியும், சுமதாவும் சென்றுள்ளனர். திருமணம் முடிந்து அங்கிருந்து இருவரும் டூவிலரில் வந்துள்ளனர். முத்துலட்சுமி புதியதாக வாங்கிய டூவிலரில் தனது மகன் ஆகாசையும்(2) அழைத்து வந்துள்ளார். திருமங்கலம் சோழவந்தான் ரோட்டில் பனைமரம் பஸ்ஸ்டாப் அருகே இவர்கள் வந்த போது எதிரே திண்டுக்கல் நோக்கி சென்ற லாரி மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே முத்துலட்சுமி, சுமிதா உயிரிழந்தனர். குழந்தை ஆகாஷ் மட்டும் அதிஷ்டவசமாக உயிர்தப்பினார். தகவலறிந்த திருமங்கலம் டவுன் போலீசார், இருவரது உடல்களையும் மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். லாரி டிரைவர் திண்டுக்கலை சேர்ந்த முருகேசன்(55) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

More