×

உசிலை அதிமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல் எம்பி, எம்எல்ஏ புறக்கணிப்பால் அதிமுக நிர்வாகிகள் `அப்செட்’ திருப்பரங்குன்றத்தில் கொரோனா விதிமீறல்

உசிலம்பட்டி, மார்ச் 16: மதுரை உசிலம்பட்டியில் அதிமுக வேட்பாளர் அய்யப்பன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அதிமுக எம்பி ரவீந்திரநாத், எம்எல்ஏ நீதிபதி புறக்கணிப்பால் கட்சியினர் அப்செட்டாகினர். உசிலம்பட்டி - மதுரை சாலையிலுள்ள அதிமுக கட்சி அலுவலகத்திலிருந்து ஊர்வலமாக அதிமுக வேட்பாளர் அய்யப்பன் தனது ஆதரவாளர்களுடன் உசிலம்பட்டி ஆர்டிஓ அலுவலகத்தில் வேட்மனுத்தாக்கல் செய்ய வந்தார். 100 மீட்டருக்கு அப்பால் அனைவரையும் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் வேட்பாளருடன் இரண்டு பேரை மட்டுமே அனுமதித்தனர். தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆர்டிஓ ராஜ்குமாரிடம் அதிமுக உசிலம்பட்டி வேட்பாளர் அய்யப்பன் வேட்புமனு தாக்கல் செய்தார். அய்யப்பன் வேட்புமனு தாக்கல் செய்யும் போது, எம்எல்ஏ  நீதிபதி கூட்டத்தோடு கூட்டமாக நின்று  விட்டு  சென்று விட்டார். அய்யப்பன் வேட்புமனு தாக்கல் செய்த போது அவர் உடன் வராதது அதிமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சிக்கு தேனி எம்.பி.ரவீந்திரநாத் வருவதாக  இருந்ததாகவும், உதயகுமார் ஆதரவாளரான அய்யப்பனுக்கு சீட் ஒதுக்கியதால், இந்த நிகழ்ச்சியை நிராகரித்ததாகவும் அதிமுகவினர் புலம்பினர். இதனால் அதிமுகவினர் புலம்பினர். உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஐந்துகோவிலான் வேட்புமனு தாக்கல் செய்தார்.

திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக சார்பில் ராஜன் செல்லப்பா, நாம் தமிழர் கட்சி சார்பில் ரேவதி, அம்பேத்கர் அரசியல் கட்சி சார்பில் பழனிக்குமார் ஆகியோர் தேர்தல் நடத்தும் அலுவலர் முருகேஸ்வரியிடம் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர். அதிமுக வேட்பாளருக்கு மாற்று வேட்பாளராக ராஜன் செல்லப்பா மனைவி மகேஸ்வரி செல்லப்பாவும், நாம் தமிழர் வேட்பாளர் ரேவதிக்கு மாற்று வேட்பாளராக அக்கட்சியின் மகளிர் பாசறையை சேர்ந்த ஜெயந்தியும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அதிமுக வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்ச்சிக்காக ஆயிரக்கணக்கானோரை அழைத்து வந்திருந்தனர். கொரோனா பரவலை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்த போதும், அதிமுகவினர் அதை கண்டுகொள்ளாமல் கூட்டம், கூட்டமாக முகக்கவசம், சமூக இடைவெளி இல்லாமல் யூனியன் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலக வளாகத்தில் கூடியிருந்தனர். இதை அதிகாரிகளும் இதை கண்டு கொள்ளவில்லை.
திருமங்கலம் திருமங்கலம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சாராள், தேர்தல் நடத்தும் அதிகாரி சவுந்தர்யாவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.மேலூர் மேலூர் தேர்தல் நடத்தும் அதிகாரியான ஆர்டிஓ ரமேஷிடம் அதிமுக எம்எல்ஏவாக உள்ள பெரியபுள்ளான் என்ற செல்வம் வேட்புமனு நேற்று தாக்கல் செய்தார். உடன் முன்னாள் எம்எல்ஏ தமிழரசன் இருந்தார். இதனை தொடர்ந்து அதிமுகவின் மாற்று வேட்பாளராக மேலூர் ஒன்றிய தலைவரான பொன்னுச்சாமி மனுதாக்கல் செய்தார். அழகர்கோவில் நாயக்கம்பட்டியை சேர்ந்த மோகன்ராம் சுயேட்சையாக மனு தாக்கல் செய்தார். இவர்களுடன் சேர்த்து 3 சுயேட்சைகளும், 2 பேர் அதிமுக சார்பிலும் மனு தாக்கல் செய்துள்ளனர்.

Tags : AIADMK ,Usila ,
× RELATED அதிமுக-தேமுதிக கூட்டணி வேட்பாளர்கள்...