×

அலங்காநல்லூர் அருகே உச்சி மாகாளி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

அலங்காநல்லூர்,மார்ச் 16: மதுரை அலங்காநல்லூர் அருகே கோவிலூர் கிராமத்தில் உள்ள  உச்சிமாகாளி அம்மன், சித்தி விநாயகர் கோயில் மகாகும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதற்காக இரண்டு கால யாக பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து காலை 9 மணிக்கு யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி அழகர்கோவில், காசி, ராமேஸ்வரம் உள்ளிட்ட புனித தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீர் கோயிலை சுற்றி வலம் வந்து கலசங்களில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள், கிராம மரியாதைகாரர்கள் செய்திருந்தனர்.மண்டலபூஜை சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் கடந்த ஜன.25ம் தேதி நடைபெற்றது. அதற்கான மண்டல பூஜை நேற்று காலை நடைபெற்றது. அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் சிறப்பு யாக பூஜைகளும், அம்மனுக்கு 18 வகையான அபிஷேகங்களும் நடைபெற்றது. இதில்  திருப்பணிக்குழுவினர், மண்டகப்படிதாரர்கள், காவல் குடும்பத்தினர், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை செயல் அலுவலர் இளமதி, கணக்கர் பூபதி, எழுத்தர் கவிதா உள்ளிட்ட பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags : Uchi ,Magali Amman Temple ,Kumbabhishekam ,Alankanallur ,
× RELATED முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்