×

பழநி தொகுதியில் ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ வேட்புமனு தாக்கல்

பழநி, மார்ச் 16: பழநி நகரை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென வேட்புமனு தாக்கல் செய்த ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ பேட்டி அளித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12ம் தேதி துவங்கியது. நேற்று திமுக சார்பில் பழநி தொகுதியில் போட்டியிடும் ஐ.பி.செந்தில்குமார் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆனந்தியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்து விட்டு வெளியே வந்த வேட்பாளருக்கு ஏராளமான தொண்டர்கள் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் செந்தில்குமார் கூறியதாவது:திமுக வெற்றி பெற்றால் நீண்டநாட்களாக கிடப்பில் கிடக்கும் பச்சையாறு அணைத்திட்டம் நிறைவேற்றப்படும். ஆயக்குடியில் கொய்யா குளிர்பதன கிட்டங்கி அமைக்கப்படும். திருமூர்த்தி அணை கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டு பழநி பகுதி மக்களின் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும். பழநியில் வேளாண் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பழநி நகரை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். இதனைத்தொடர்ந்து பழநி அருகே கோம்பைபட்டி மற்றும் பச்சளநாயக்கன்பட்டி பகுதிகளில் ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நேற்றைய நாளில் அதிமுக வேட்பாளர் ரவி மனோகரனும் வேட்புமனு தாக்கல் செய்தார்.

Tags : IP Senthilkumar ,Palani ,
× RELATED பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை: பாஜ மாவட்ட செயலாளர் கைது