ஒட்டன்சத்திரம் திமுக வேட்பாளர் அர.சக்கரபாணி எம்எல்ஏ மனு தாக்கல்

ஒட்டன்சத்திரம், மார்ச் 16: ஒட்டன்சத்திரம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அர.சக்கரபாணி எம்எல்ஏ தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமாரிடம் நேற்று மனுத் தாக்கல் செய்தார். மனுத்தாக்கல் செய்தபின் செய்தியாளர்களிடம் கூறுகையில், தொகுதி மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்கு பலமுறை சட்டமன்றத்தில் வலியுறுத்தியதன் பேரில், பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்தில் ரூ.530 கோடி திட்ட மதிப்பீடு செய்து தற்போது ஆய்வுப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி, நத்தம் உள்ளிட்ட பொதுமக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும். திமுக ஆட்சி அமைந்தவுடன் ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி ஆகிய பகுதிகளில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகம் அமைக்கப்படும். தொகுதியில் விட்டுப்போன திட்டங்களை நிறைவேற்றி தமிழகத்திலேயே முன்மாதிரி தொகுதியாக ஒட்டன்சத்திரம் தொகுதியை மாற்றுவேன். வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது உறுதி’’ என்றார். வேட்புமனுத் தாக்கலின் போது, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ப.சசி, திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் ப.வேலுச்சாமி, ஒட்டன்சத்திரம் நகர செயலாளர் வெள்ளைச்சாமி ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: