செய்யூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வேட்பு மனுத்தாக்கல்

செய்யூர்,  மார்ச் 16: செய்யூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கணிதாசம்பத் உட்பட 3 கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் (தனி) சட்டமன்ற தொகுதிக்கான அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் கணிதாசம்பத் நேற்று செய்யூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று தேர்தல் அதிகாரி சீதாவை சந்தித்து வேட்பு மனு தாக்கல் செய்தார். இதேபோன்று, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரா.ராஜேஷ், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் சே.இளையராஜா ஆகியோர் தேர்தல் அதிகாரியை சந்தித்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.   

Related Stories: