×

கும்மிடிப்பூண்டி அருகே தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி

கும்மிடிப்பூண்டி, மார்ச் 16: தேர்தல் பணியில் ஈடுபட உள்ள 2835 ஊழியர்களுக்கு கும்மிடிப்பூண்டியில் 2 பள்ளிகளில் தேர்தல் குறித்த முதல்கட்ட பயிற்சி அளிக்கப்பட்ட நிலையில் பயிற்சிக்கு வந்த அதிகாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி நேற்று போடப்பட்டது. கும்மிடிப்பூண்டி மற்றும் எல்லாபுரம் ஆகிய இரண்டு ஒன்றியங்களை சேர்ந்த 2835 ஊழியர்களுக்கு கும்மிடிப்பூண்டி தனியார் பள்ளி, சிந்தலக்குப்பம் தனியார் பள்ளி ஆகிய இரு பள்ளிகளில் தேர்தல் பயிற்சி அளிக்கப்பட்டது.
தேர்தல் அன்று வாக்கு சாவடிகளில் பணிபுரிய உள்ள கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தை சேர்ந்த 1597 பேருக்கும், எல்லாபுரத்தை சேர்ந்த 1238, என 2835 ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதில் தேர்தல் குறித்த சிறப்பு பயிற்சி தேர்தல் நடத்தும் அலுவலர் உதவி ஆட்சியர் பாலகுரு தலைமை தாங்கினார். கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் மகேஷ், ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் ஏ.என்.குமார், கும்மிடிப்பூண்டி தேர்தல் பணி துணை வட்டாட்சியர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  தொடர்ந்து அனைத்து ஊழியர்களுக்கும் வாக்குசாவடிகள் செய்ய வேண்டிய பணிகள், வாக்குப்பதிவு இயந்திரத்தில் செய்ய வேண்டிய பணிகள் எடுத்துரைக்கப்பட்டதோடு, அவர்களுக்கு கையேடுகள் வழங்கப்பட்டது.

மேலும் வாக்குபதிவு இயந்திரங்களை கையாளும் பயிற்சி அளிக்கப்பட்டது. நிகழ்வில் அனைத்து தேர்தல் பணியாளர்களுக்கும் தபால் வாக்குப்படிவம் வழங்கி 100 சதவீதம் அனைவரும் வாக்களிக்க அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், தேர்தல் பணி பயிற்சிக்கு வந்த அரசு ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. கும்மிடிப்பூண்டி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜ் தலைமையில் கும்மிடிப்பூண்டி தனியார் பள்ளி, கும்மிடிப்பூண்டி சிந்தலக்குப்பம் தனியார் பள்ளி ஆகிய இரு பயிற்சி மையங்களிலும் தனித்தனியாக கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.  நிகழ்வில் ஊத்துக்கோட்டை வட்டாட்சியரும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான ஏ.என்.குமார் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். அடுத்த இரு தேர்தல் பயிற்சிகளின்போது தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து அலுவலர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட்டு முடிக்கப்படும் என தேர்தல் நடத்தும் அலுவலர் உதவி ஆட்சியர் பாலகுரு தெரிவித்தார்.

Tags : Corona ,Gummidipoondi ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...