×

மயிலாப்பூர் 124 ‘அ’ வட்டத்தில் திமுக வேட்பாளர் மயிலை த.வேலுவுக்கு பெண்கள் உற்சாக வரவேற்பு: கிழக்கு பகுதி சார்பில் பணிமனை திறப்பு

சென்னை: மயிலாப்பூர் திமுக வேட்பாளர் மயிலை த.வேலு, 124 ‘அ’ வட்டத்தில் நேற்று காலை வீதி வீதியாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பளித்தனர். சென்னை மயிலாப்பூர்  தொகுதியில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக மயிலை த.வேலு போட்டியிடுகிறார். அவர் நேற்று காலை 7 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முதற்கட்டமாக தன்னித்துறை  மார்க்கெட் பகுதியில் இருந்து பிரசாரத்தை தொடங்கினார். அப்போது அப்பகுதியில் உள்ள மக்களிடம் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கும்படி பிரசாரம் மேற்கொண்டார். அதை தொடர்ந்து கணேசபுரம், பிருந்தாவனம் தெரு, வீர பெருமாள்  கோயில் தெரு, அப்பர்சாமி கோயில் தெரு, சிதம்பரசாமி கோயில் தெரு 1, 2, 3 மற்றும் பாலசுப்பிரமணியம் தெரு, திருவீதி அம்மன் கோயில் தெரு, பி.எஸ்.சிவசாமி சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று  தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். அப்போது திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அறிவிப்புகள் குறித்து கூறி வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டார்.

பெண்களிடம் திமுக தேர்தல் அறிக்கைக்கு வரவேற்பு அதிகமாக இருந்தது. போகும் இடங்களில் எல்லாம் பெண்கள் ஆரத்தி எடுத்து அவர் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தனர். பிரசாரத்திற்கு இடையில் நேற்று மயிலாப்பூர் கிழக்கு பகுதி சார்பில்  அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். அப்போது மேற்கு பகுதி செயலாளர் நந்தனம் மதி, கிழக்கு பகுதி செயலாளர் முரளி மற்றும் பகுதி துணை செயலாளர் அசோக் மற்றும் திமுக தொண்டர்கள், கூட்டணி கட்சி  நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இன்று 121வது வட்டத்தில் காலை 7 மணி முதல் பிற்பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும்  கூட்டணி நிர்வாகிகள், தொண்டர்களுடன் வாக்கு சேகரிக்க உள்ளார்.

Tags : Mylapore 124 ,Circle DMK ,Mayilai T. Velu ,
× RELATED குடிசையில்லா தொகுதியாக மாற்றுவேன்: மயிலை த.வேலு வாக்குறுதி