பொன்மலை பணிமனையில் மகளிர் தினத்தையொட்டி

திருச்சி, மார்ச் 15: பொன்மலையில் உள்ள மத்திய ரயில்வே பணிமனையில் உற்பத்தி செய்யப்பட்ட 50வது வேகன் மற்றும் முதல் தொகுப்பு பி.எல்சி.எஸ் இரண்டடுக்கு கன்டெய்னர் வேகன்கள் பெண் சக்தியை நினைவு கூறும் சிறப்பு விழா நடந்தது. திருச்சி பொன்மலை மத்திய பணிமனை நடப்பு நிதியாண்டின் துவக்கத்தில் கோவிட்-19 தொற்று நோய் அபாயம் ஆழ்ந்திருந்த நிலையிலும் இந்த பணிமனைப் பெண்களின் கணிசமான பங்களிப்புடன் 500 புதிய வேகன்கள் கட்டுமானப் பணியை செய்து நிறைவேற்றியது.

அகில உலகப் பெண்கள் தினக் கொண்டாட்டங்களின் ஓர் அங்கமாக கொள்கலன் வகை வேகன்களின் முதல் தொகுப்பு நிறைவடைந்ததை நினைவு கூறும் வகையில் பணிமனையின் பல்வேறு பிரிவுகளில் பணிபுரியும் 10 பெண் அதிகாரிகள், பொறியாளர்கள், குமாஸ்தாக்கள் மற்றும் தொழிலாளர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். தொடர்ந்து திருச்சி ரயில்வே டிவிஷனைச் சேர்ந்த மகளிர் லோகோ ஓட்டுனர்கள் ஜான்சிராணி மற்றும் தமாரி நந்தினி, மகளிர் லோகோ ஆய்வாளர் நாராயன வடிவு, பிரேக் (கார்ட்) வேனில் மகளிர் கார்டு தமாரி நீலாதேவி ஆகியோர் புதிய வேகன்களை இயக்கினர்.

இந்திய கொள்கலன் கார்ப்பரேஷன் வழங்கிய புதிய 1035 வேகன் ஆர்டரின் ஒரு பகுதியாக இந்த முதல் வேகன்கள் தயாரித்து முடிக்கப்பட்டுள்ளது.  அகில இந்திய அளவில் இப்பணிமனையானது ஜூலை 2000 ல் பிஎல்சிஎஸ் வேகன்களைத் தயாரித்த முதல் நிறுவனம் என்ற சிறப்பைப் பெற்றது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னே இந்த மேம்பட்ட வேகன்களின் மூலம் முன் மாதிரியை வெற்றிகரமாக முடித்த நம் நாட்டின் ஒரே பணிமனை என்ற பெருமையையும் பொன்மலைப் பணிமனையைச் சேரும். முன்னதாக முதன்மைப் பணிமனை மேலாளர் ஷியாமாதார் ராம் மற்றும் மூத்த அதிகாரிகள் இப்பணிமனையின் பெண் சிறப்பு விருந்தினர்களை கவுரவித்தனர்.

Related Stories:

>