முத்துப்பேட்டை கோவிலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு சீருடை வழங்கல்

முத்துப்பேட்டை, மார்ச் 15: முத்துப்பேட்டை கோவிலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு ரூ.1 லட்சம் மதிப்புள்ள சீருடைகள் வழங்கப்பட்டன. முத்துப்பேட்டை கோவிலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் விதைக்கும் கரங்கள் அமைப்பு சார்பில் 100 மாணவிகளுக்கு ஒரு லட்சம் மதிப்புள்ள சீருடைகள் வழங்கப்பட்டது. முன்னதாக பள்ளியில் நடந்த நிகழ்சிக்கு பள்ளி தலைமையாசிரியை உமா மகேஷ்வரி தலைமை வகித்தார். இதில் அமைப்பின் நிர்வாகிகள் நந்தா ஜீவானந்தம், ஜாம்பை வெங்கட், சுபாஷ் ராஜப்பா, ராமலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டு மாணவிகளுக்கு சீருடைகளை வழங்கினர்.

Related Stories:

>