திருவையாறு அருகே நாகத்தியில் நள்ளிரவில் வீடு புகுந்து 10 பவுன், பணம் கொள்ளை

திருவையாறு, மார்ச் 15: திருவையாறு அருகே நாகத்தியில் நள்ளிரவில் வீடு புகுந்து 10 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடுத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த நடுக்காவேரி போலீஸ் சரகம் நாகத்தி கிராமம் மூப்பனார் தெருவில் வசிக்கும் சபாபதி மகன் நடராஜன் (51). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனது மனைவி, மகள் ஆகியோருடன் தூங்கிகொண்டு இருந்தார். அப்பொழுது நள்ளிரவில் மர்ம நபர்கள் கொள்ளைபுற கதவின் தாழ்ப்பாளை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த தாலிச்செயின் 5 பவுன், இதர செயின் 5 பவுன், கொளுசு மற்றும் ரூ.3 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

விடியற்காலை எழுந்து பார்த்தபோது, கொள்ளைபுற கதவை திறந்து பீரோ உடைக்குப்பட்டு, அதிலிருந்த நகைகள் பணங்கள் கொள்ளை போனது கண்டு நடராஜன் அதிர்ச்சி அடைந்தார். உடனே நடுக்காவேரி போலீசில் புகார் செய்தார். டிஎஸ்பி சித்திரவேல், இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ், சப்-இன்ஸ்பெக்டர் சிசியோரா ஆகியோர் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு மோப்ப நாய் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். நடராஜன் துபாயில் சுமார் 10 ஆண்டுகலாக வேலைபார்த்து வந்தார். கொரோனா காலத்தில் ஊருக்கு வந்தவர் திரும்பி செல்லவில்லை. இவருக்கு சிவகாமி என்ற மனைவியும் மூன்று மகள்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More