தஞ்சை ஆர்டிஓ அலுவலகத்தில் இருந்து 8 தொகுதிகளுக்கு வாக்கு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

தஞ்சை, மார்ச் 15: தஞ்சை ஆர்டிஓ அலுவலகத்திலிருந்து தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் முன்னிலையில் அனுப்பி வைக்கப்பட்டன.

தஞ்சை ஆர்.டி.ஓ.அலுவலகத்தில் உள்ள வைப்பறையிலிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை அனைத்து 8 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 2,886 வாக்குச் சாவடிகளுக்கு பயன்படுத்த உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் அனுப்பி வைக்கப்பட்டன.

இதில் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 355 வாக்குச்சாவடி மையங்களுக்கு 423 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 423 கட்டுப்பாட்டு கருவிகள், 462 வாக்காளர் பதிவு செய்த வாக்கை உறுதி செய்யும் கருவியும், கும்பகோணம் தொகுதியில் உள்ள 378 வாக்குச்சாவடி மையங்களுக்கு 450 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 450 கட்டுப்பாட்டு கருவி, 492 வாக்காளர் பதிவு செய்த வாக்கை உறுதி செய்யும் கருவியும், பாபநாசம் தொகுதியில் உள்ள 362 வாக்குச்சாவடி மையங்களுக்கு 431 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 431 கட்டுப்பாட்டு கருவிகள், 471 வாக்காளர் பதிவு செய்த வாக்கை உறுதி செய்யும் கருவிகளும், திருவையாறு தொகுதியில் உள்ள 385 வாக்குச்சாவடி மையங்களுக்கு 459 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 459 கட்டுப்பாட்டு கருவிகள், 501 வாக்காளர் பதிவு செய்த வாக்கை உறுதி செய்யும் கருவிகளும், தஞ்சை தொகுதியில் உள்ள 406 வாக்குச்சாவடி மையங்களுக்கு 484 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 484 கட்டுப்பாட்டு கருவிகள், 528 வாக்காளர் பதிவு செய்த வாக்கை உறுதி செய்யும் கருவிகளும், ஒரத்தநாடு தொகுதியில் உள்ள 340 வாக்குச்சாவடி மையங்களுக்கு, 405 வாக்குப்பதிவு இயந்திரம், 405 கட்டுப்பாட்டு கருவி, 442 வாக்காளர் பதிவு செய்த வாக்கை உறுதி செய்யும் கருவி,

பட்டுக்கோட்டை தொகுதியில் உள்ள 345 வாக்குச்சாவடி மையங்களுக்கு 411 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 411 கட்டுப்பாட்டு கருவிகள், 449 வாக்காளர் பதிவு செய்த வாக்கை உறுதி செய்யும் கருவிகள், பேராவூரணி தொகுதியில் உள்ள 315 வாக்குச்சாவடி மையங்களுக்கு 375 வாக்குப்பதிவு இயந்திரம், 375 கட்டுப்பாட்டு கருவி, 410 வாக்காளர் பதிவு செய்த வாக்கை உறுதி செய்யும் கருவிகள் அனுப்பி வைக்கப்பட்டன. மொத்தம் 2,886 வாக்குச்சாவடி மையங்களுக்கு 3,438 வாக்குப்பதிவு இயந்திரமும், 3438 கட்டுப்பாட்டு கருவியும், 3755 வாக்காளர் பதிவு செய்த வாக்கை உறுதி செய்யும் கருவியும், வாக்குப்பதிவு எந்திரங்கள் கருவிகளுக்கு பயன்படுத்த உள்ள 3900 பேட்டரியும், வாக்காளர் பதிவு செய்த வாக்கை உறுதி செய்யும் கருவிகளுக்கு பயன்படுத்த உள்ள 4000 பேட்டரியும், சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மூலம் அனைத்து தொகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுவதை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் நேரில் பார்வையிட்டார். இக்கருவிகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த சட்டமன்ற தொகுதியில் பாதுகாப்பாக வைக்கப்பட உள்ளது.

இதில் தஞ்சை ஆர்.டி.ஓ.வேலுமணி, திருவிடைமருதூர் தேர்தல் நடத்தும் அலுவலர் கமலகண்ணன், ஒரத்தநாடு தேர்தல் நடத்தும் அலுவலர் பழனிவேல், திருவையாறு தேர்தல் நடத்தும் அலுவலர் மஞ்சுளா, வாக்குப்பதிவு இயந்திரம் மேலாண்மை அலுவலர் சுப்பையா மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: