×

தமிழகம் இழந்த உரிமைகளை மீட்டெடுக்க திமுகவுக்கு பிரசாரம் செய்ய ஏஐடியூசி ஓய்வூதியர்கள் முடிவு

தஞ்சை, மார்ச் 15: தமிழ்நாட்டின் இழந்த உரிமைகளை மீட்டெடுக்க வரும் சட்டமன்ற தேர்தலில் தஞ்சை தொகுதி திமுக வேட்பாளருக்கு ஆதரவாக 51 வார்டுகளிலும் பிரசாரம் மேற்கொள்ள ஏஐடியூசி ஓய்வூதியர் கூட்டத்தில் முடிவு முடிவு செய்யப்பட்டது. கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் செயல் பட்டு வரும் ஏஐடியூசி ஓய்வூதியர்கள் சங்க நிர்வாக குழு கூட்டம் தஞ்சாவூர் ஏஐடியூசி மாவட்ட அலுவலகத்தில் சங்க தலைவர் மல்லி தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது. நடைபெற்ற பணிகள் குறித்து பொதுச் செயலாளர் அப்பாத்துரை பேசினார்.

நடைபெறும் 16வது தமிழக சட்டமன்ற தேர்தலில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு எதிரான பாசிச பாஜகவையும், தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜக அரசிடம் அடகு வைத்துவிட்ட அடிமை அண்ணா திமுக கூட்டணி கட்சிகளை வீழ்த்திடவும், மக்களுக்கு சிறப்பாக சேவை செய்து வரும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் பணிமனைகள் அனைத்தும் வங்கிகளில் அடகு வைக்கப்பட்டுள்ளது நிர்வாகம். அன்றாடம் வரவுக்கும் செலவுக்கும் ஆன இடைவெளியில் செலவுகள் அதிகமாகி நிதிப்பற்றாக்குறை நாள்தோறும் ஏற்பட்டு வருகிறது .பணிபுரிந்து வரும் தொழிலாளர்களின் 14 வது ஊதிய ஒப்பந்தம் பேசி முடிக்கப் படாமல் இடைக்கால நிவாரணத்துடன் நிலுவையில் உள்ளது.

எனவே இழந்துவிட்ட தொழிலாளர்களின் உரிமைகளை மீட்டெடுக்க, கழகங்களை பாதுகாக்க திமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து சம்மேளன துணைத் தலைவர் துரை.மதிவாணன் பேசினார். கூட்டத்தில் மாநில செயலாளர் சந்திரகுமார், மாவட்ட செயலாளர் தில்லைவனம், ஓய்வு பெற்றோர் சங்க நிர்வாகிகள் பீர்தம்பி, மாணிக்கம், வெங்கட பிரசாத், சுப்பிரமணியன், அருள்தாஸ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் கூட்டத்தில் தஞ்சை மாவட்டத்தில் அரசு போக்குவரத்துக் கழகம் செயல்பட்டுவரும் திருவையாறு, தஞ்சாவூர் ,பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர் பேராவூரணி, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக்கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யஅனைத்து வகையான பிரச்சாரங்கள் மேற்கொள்வது, தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதியில் 51 வார்டுகள் மற்றும் தஞ்சாவூர் தற்காலிக பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், மக்கள் அதிகமாக கூடுகின்ற கீழவாசல், ரயிலடி, பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் திமுக வேட்பாளருக்கு வரும் 29ம் தேதி முதல் பிரசாரம் மேற்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.

Tags : AITUC ,DMK ,Tamil Nadu ,
× RELATED இந்தியா கூட்டணிக்கு தொழிற்சங்கங்கள் ஆதரவு